அமெரிக்காவில் 5400 விமானங்கள் பலமணி நேரம் தாமதம்.. 900 விமானங்கள் ரத்து.. காரணம் என்ன.?
அமெரிக்காவின் கணினி பழுது காரணமாக விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM) முறை செயலிழந்தது.
இதன் காரணமாக 5400 விமானங்களைத் தாமதப்படுத்தவும் தரையிறக்கவும் உத்தரவிடப்பட்டது. சுமார் 900 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமானப் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விமான சேவைகள் மீண்டும் படிப்படியாகத் தொடங்கியுள்ளன. வானத்தில் உள்ள அனைத்து விமானங்களையும் பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிபர் ஜோ பிடனுக்கு விமானக் கட்டுப்பாடு கணினி அமைப்பின் செயலிழப்பு குறித்து போக்குவரத்துச் செயலர் விளக்கமளித்தார், இதன் காரணங்கள் குறித்து முழு விசாரணை நடத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். .
Comments