எரிவாயு மீதான ஜி-7 நாடுகளின் விலை வரம்பு நிர்ணயத்தால் ரஷ்யாவுக்கு நாள் ஒன்றுக்கு 280 மில்லியன் டாலர்கள் இழப்பு
எரிவாயு மீதான ஜி -7 நாடுகளின் விலை வரம்பு நிர்ணயத்தால் அடுத்த மாதம் முதல் ரஷ்யாவுக்கு நாள் ஒன்றுக்கு 280 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின்மீது ஜி7 நாடுகள் விலை வரம்புகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்ரைனில் அதன் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் ரஷ்ய அரசின் திறனைக் குறைக்கும் என்று ஜி-7 நாடுகள் குழு நம்புவதாகவும், நாட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கச்சா பொருட்களுக்கு ஜி-7 விலை வரம்பு நீட்டிக்கப்படும்போது, பிப்ரவரி 5 முதல் ரஷ்யா ஒரு நாளைக்கு 280 மில்லியன் டாலர் வரை வருவாயை இழக்கும் என்றும் ஃபின்லாந்தின் ஆற்றல் மற்றும் காற்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஜி-7 கூட்டமைப்பின் விலை வரம்பில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments