ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழப்பு!

0 1610

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சல் செக்டரில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் இன்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது.

பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் சென்ற வாகனம் தவறி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் 3 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments