அஜித் - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

0 3340

நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படத்தின் சிறப்பு காட்சியினை ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் நடனம் ஆடியும் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் துணிவு படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு ஒரு மணி அளவில் திரையிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே திரையரங்கில் குவிந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் திரண்டு நடனம் ஆடிய படி ஆரவாரத்துடன் படத்தினை கண்டு ரசித்தனர்.

தென்காசி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் துணிவு படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்து கூச்சல் போட்ட ரசிகர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி,மதுரை, தூத்துக்குடி, சேலம், ராணிப்பேட்டை,செங்கல்பட்டு, ராசிபுரம், கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் துணிவு படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் அதிகாலை 4 மணி அளவில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் படத்தினை கண்டு ரசித்தனர்.

இதற்கிடையில் அதே திரையரங்கின் மற்றொரு புறம் அஜித் பேனரை கிழித்து விஜய் பேனரை வைத்ததற்காகவும் ரசிகர்கள் சிலர் தியேட்டர் வளாகத்தில் கற்களை வீசி எறிந்தனர். இதனால் திரையரங்கில் உள்ள கண்ணாடி நொறுங்கி தூள் தூளானது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருவள்ளூர், தூத்துக்குடி, சேலம், குளித்தலை திருப்பூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் சிறப்புக் காட்சியினை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments