பெங்களூர் அருகில் உள்ள ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை வாங்குகிறது டாட்டா குழுமம்!

0 1378

பெங்களூர் அருகே உள்ள தைவான் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

128 பில்லியன் டாலர் மதிப்புடைய டாட்டா குழுமம் ஐ போன் உற்பத்தி செய்ய தைவான் விஸ்ட்ரன் கார்ப்பரேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 31 ம் தேதியுடன் நிறைவு பெற்று ஏப்ரல் முதல் டாட்டா நிறுவனம் உற்பத்தியை தொடங்க உள்ளது.

பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலை 2 புள்ளி 2 மில்லியன் சதுர அடி பரப்புடையது. இங்கு உள்ள எட்டு செல்போன் லைன்களையும் டாட்டா நிறுவனம் வாங்க உள்ளது. இதன் பத்தாயிரம் ஊழியர்கள், சில ஆயிரம் பொறியியல் வல்லுனர்கள் டாட்டா குழுமத்தால் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளனர்.

இது உள்நாட்டு மின்னணு துறையில் முன்னிலை பெறும் இந்தியாவின் இலக்கை எட்ட உதவும் என்று டாட்டா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஐ போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சீனாவுக்கு இது சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments