தேசிய கீதத்தில் திராவிடம் சொல் இருப்பதால் தேசிய கீதம் பாடாமல் இருப்பாரா.? தமிழக ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

0 3417

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் வருகிறது என்பதற்காக ஆளுநர் தேசிய கீதம் பாடாமல் இருப்பாரா என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் செயல்பாடுகள் சட்டமன்ற மரபுகளுக்கு மீறிய செயலாக உள்ளது என்றார்.

ஆளுநரும் ஆளுங்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அன்புமணி, ஆன்லைன் சூதாட்டம் பிரச்னையில் ஆளுநர் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments