தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை!
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. சிறையில் உள்ள முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் புதிய அதிபர் டினா போலுவார்ட் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜூலியாகா எனும் இடத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் 17க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 68 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments