மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ரூ.4,276 கோடியில் ஆயுதங்கள் வாங்க முடிவு!
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புக்கான கொள்முதல் கவுன்சில் அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா என்ற டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரம்மோஸ் ஏவுகணைச் செலுத்த உதவும் லாஞ்சர்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments