யார் உண்மையான சிவசேனா? என்பது தொடர்பான வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் - உச்சநீதிமன்றம்..!
உண்மையான சிவசேனா யார்? என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தவ் தாக்ரே ஆட்சி மீது அதிருப்தியடைந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், பாஜகவுடன் இணைந்து, மகாராஷ்டிர முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, ஷிண்டே பதவியேற்றது மற்றும் சபாநாயகர் நியமனம் தொடர்பாகவும் ஆளுநர் எடுத்த முடிவு மற்றும் தாக்கரே தரப்பு எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய உள்ள பிரச்சனைகள் தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு, வழக்கினை மாற்றுவது தொடர்பாக தாக்கரே தரப்பினர் விடுத்த வேண்டுகோள், முதலில் விசாரிக்கப்படுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments