''2040-க்குள் உலக எரிபொருள் தேவையில் 25 சதவீதம் பங்களிப்பை இந்தியா வழங்கும்'' - அமைச்சர் ஹர்தீப் சிங் புரி..!

0 11409

2040ஆம் ஆண்டிற்குள் உலக எரிபொருள் தேவையில், 25 சதவீத பங்களிப்பை இந்தியா வழங்கும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 2022ஆம் ஆண்டில் பெட்ரோலில் 10 புள்ளி 17 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டிற்குள் 20% கலப்பு எட்டப்படும் என்றார்.

இந்திய கச்சா எண்ணெய்யை பெறும் நாடுகளின் எண்ணிக்கை 2006-07ஆம் ஆண்டில் 27ஆக இருந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டில் 39ஆக அதிகரித்ததாகவும் ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானாவின் பானிபட், பஞ்சாபின் பதிண்டா உள்ளிட்ட 5 இடங்களில் இரண்டாம் தலைமுறை எத்தனால் உயிரி சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments