''மத்திய அரசின் நிர்பயா நிதியின் கீழ் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்.'' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
மத்திய அரசின் நிர்பயா நிதியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க, சென்னையில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளின் கண்காணிப்பை ஒருங்கிணைக்க, பல்லவன் இல்லத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் நிர்பயா நிதியின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு, பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் 3 கேமரா, 4 பேனிக் பட்டன், செயற்கை நுண்ணறிவு வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்பட்டு, இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் காணாமல் போனவர்களை அவரது பயண நேரத்தை வைத்து, சிசிடிவி மூலம் கண்டறியவும், குற்றவாளிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் அடையாளம் காணவும், பெண்கள் பேனிக் பட்டன்களை அழுத்திடும் பட்சத்தில், பெண்களுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவோர்களை உடனே கண்டறியும் வகையில், போக்குவரத்துறையினர் மற்றும் காவல்துறையினரை ஒருங்கிணைத்து, இந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
Comments