தேவாலய நிர்வாகத்தினர் முறையாக குப்பைகளை அகற்றாத விவகாரத்தில் பாதிரியாரை தாக்கிய அரசியல் பிரமுகர்..!
கடலூர் மாவட்டத்தில் தேவாலயம் முன்பாக குப்பை கொட்டப்பட்டதை தட்டிக் கேட்ட பாதிரியாரை தாக்கிய மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் தாக்குதல் குறித்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
முதுநகர் பகுதியில் உள்ள தூய கிறிஸ்துவநாதன் தேவாயலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறப்பட்டு அதன் இலைகள் மற்றும் தட்டுகள் பல்வேறு இடங்களில் கொட்டப்படுவதாக, 42வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்திலிடம் சிலர் புகார் தெரிவித்ததையடுத்து அவரது உத்தரவின்படி, மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை மீண்டும் எடுத்து வந்து தேவாலயம் முன்பாக கொட்டியுள்ளனர்.
இதுகுறித்து, தேவாலய பாதிரியார் பிலிப் ரிச்சர்ட் தொலைபேசியில் செந்திலிடம் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால், நேரில் வந்த செந்தில் பாதிரியாரை தாக்கியுள்ளார்.
இதனைக் கண்டித்து தேவாலயத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Comments