ஐதராபாத்தில் உள்ள பீரங்கி படை மையத்தில் அக்னி வீரர்களுக்கான 31 வார பயிற்சி..!
ஐதராபாத்தில் உள்ள பீரங்கி படை மையத்தில் அக்னி வீரர்களுக்கான 31 வார பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட 2,264 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 10 வாரங்கள் அடிப்படை ராணுவப் பயிற்சியும், 21 வாரங்கள் மேம்பட்ட ராணுவப் பயிற்சி, உடல் தகுதி, துப்பாக்கிச் சூடு, பல்வேறு பீரங்கி மற்றும் துப்பாக்கிகளை கையாளுதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
சைபர் பாதுகாப்பு, போர் உத்திகள், போர் திட்டமிடல், போர் தந்திரங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Comments