கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு.. புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று ரம்மியமாக காட்சி..!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கீழ்பூமி புல்வெளிப் பகுதிகளில் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போன்று ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
பகல் நேரங்களில் கடும் வெப்பமும், காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இன்று காலை 6 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக தட்ப வெப்பம் நிலவியது.
பாம்பார் புரம், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது.
Comments