மாஸ்கோ-கோவா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக குஜராத்துக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கம்..!
ரஸ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்துக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் விமானம் 236 பயணிகளுடன் வந்தது. இந்நிலையில் கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த விமானம் உடனடியாக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 236 பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments