ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சிக்கிய பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு
ராஜஸ்தானில், ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சிக்கிய பயிற்சி மையத்தின் கட்டிடம் இடித்து தரைமாக்கப்பட்டது.
உதய்ப்பூரில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பாக, தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் ஜெயப்பூரில் உள்ள பிரபல கோச்சிங் சென்டர் நடத்தி வந்த நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பது தெரிவந்தது. இதுதொடர்பாக இதுவரை 37 தேர்வர்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெகந்நாத்புரா பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அந்த பயிற்சி மையத்தின் 5 மாடிக் கட்டிடத்தை ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணைய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
Comments