சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 90 சதவீத பேர் கொரோனா நோயால் பாதிப்பு - சுகாதாரத்துறை அதிகாரி பேட்டி!

0 1654

சீனாவின் 3-வது அதிக மக்கள்தொகை கொண்ட ஹெனான் மாகாணத்தில் 90 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்க போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹெனான் மாகாணத்தில் மொத்த மக்கள்தொகையான 99.4 மில்லியனில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 வாரங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments