பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் - 'எலி பேஸ்ட்' சாப்பிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!
கேரளாவில், ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்டு கல்லூரி மாணவி அஞ்சுஸ்ரீ உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், காதலன் உயிரிழந்த வருத்தம் தாங்காமல் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
காசர்கோட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆன்லைனில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
4 பேர் நலமாக இருக்க, அஞ்சுஸ்ரீக்கு மட்டும் உடல்நலன் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தரமற்ற பிரியாணியை சாப்பிட்டு அஞ்சுஸ்ரீ உயிரிழந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ரத்தத்தில் விஷம் கலந்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து அஞ்சுஸ்ரீ உயிரிழந்துள்ளது பிரேத பரிசோதனையின்போது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், அஞ்சுஸ்ரீ, 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்துவந்த இளைஞர் புற்றுநோய் பாதிப்பால் ஒரு மாதத்திற்கு முன் உயிரிழந்ததும், அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த அஞ்சுஸ்ரீ எலி பேஸ்ட் சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.
Comments