டெல்லியில் கடும் பனி மூட்டம்.. 267 ரயில்கள் ரத்து - 170 ரயில்கள் தாமதமாக இயக்கம் - ரயில்வே துறை

0 1240

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக, விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 267 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சுமார் 170 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

குளிர் அலை காரணமாக பள்ளிகள் திறப்பதை, ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.

டெல்லியின் பல பகுதிகளிலும், பஞ்சாப், ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களிலும் நாளை வரை, அடர் பனி மூட்டம் நிலவும் என, இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments