ஆளுநரை அழைத்து வந்து அவருக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!
அரசின் திட்டம் மற்றும் கொள்கையினை ஆளுநர் படிப்பது தான் மரபு என்றும், ஆளுநரை தங்களின் சித்தாந்தத்திற்கு புகழ்பாடக்கூடியவராக அரசு கருத முடியாது என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், நீட் விவகாரத்தில் ஆளுநர் எழுப்பிய கேள்விகளை, அரசு பொதுவெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது? என கேள்விஎழுப்பினார்.
மேலும், சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து வந்து அவருக்கு எதிராக செயல்பட்டுள்ளதாகவும் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டினார்.
Comments