''ராமர் பாலத்தை இடித்து, அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்க சேது சமுத்திர திட்டம்..'' - அண்ணாமலை..!

0 4990

இந்தியாவின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்க சேது சமுத்திர திட்டம் தீட்டப்பட்டதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்ட அத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் மானம் கப்பலேறி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டமான தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இல்லாமல், இடையில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, எவ்வாறு அதனை தனிப்பட்ட சாதனையாக கூற முடியும் என, முதலமைச்சரின் உரையை சுட்டிக்காட்டி, அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments