''ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை அரசியலாக்கக்கூடாது..'' - பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்..!

0 2342

அனைவரும் இந்தியர்கள் என்ற ஒருமைப்பாட்டு உணர்வுக்காக, தமிழகம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்ததாகவும், அதனை அரசியலாக்கக்கூடாது என்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

கோவையில் 'நம்ம ஊரு மோடி பொங்கல்' என்ற பெயரில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

பின்னர் பேட்டியளித்த அவர், தனது தேசிய மற்றும் கலாச்சார உணர்வை ஆளுநர் அழுத்தமாக முன் வைப்பதாகவும், அதனை பிடிக்காதவர்கள் விமர்சிப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments