நிலவெடிப்புகளால் புதைந்து வரும் இமயமலையை ஒட்டி அமைந்துள்ள ஜோஷிமத் நகரம்!

0 2710

ஒரே ஆண்டில் 5 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் கடந்த சில நாட்களாக நிலவெடிப்புகள் ஏற்பட்டு புதைந்து வருவது, மலை நகரங்களின் உட்கட்டமைப்பை தெளிவாகத் திட்டமிடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

50 ஆண்டுகளுக்கு முன் சில ஆயிரம் பேரே வசித்த ஜோஷிமத்  நகரில் தற்போது 25,000 பேர் வசித்துவருகின்றனர். ஆண்டுதோறும் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தரும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட நிலவெடிப்புகளால் அந்நகரமே புதையத்தொடங்கியுள்ளது.

அங்கு வசிப்பவர்களை வேறு இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், நைனிடால், முசோரி போன்ற சுற்றுலாதளங்களுக்கு வருவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் பாரம் தாங்கும் திறன் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments