வெனிசூலாவிலிருந்து அமெரிக்காவிற்கு அகதிகளாக வந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
அடைக்கலம் தேடி அமெரிக்கா வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் வெனிசூலாவிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வெனிசூலாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், லட்சக்கணக்கானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்துவருகின்றனர். கடந்தாண்டு மட்டும் வெனிசூலாவை சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் எல்லையை தாண்டும்போது பிடிபட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வோரை வெளியேற்ற முடிவெடுத்த அமெரிக்க அரசாங்கம், வெனிசூலாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பியது.
கியூபா, ஹைட்டி போன்ற நாடுகளிலிருந்து வருவோரையும் திருப்பி அனுப்ப அமெரிக்கா பரிசீலித்துவருகிறது.
Comments