தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் புத்தக மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்

0 1657

சென்னை கோயம்பேட்டில் அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான நிலையில் , போலீசார் 3 மணி நேரத்தில் துப்புதுலக்கி மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோயம்பேட்டை சேர்ந்த சத்தியசுந்தரம்- சாந்தி தம்பதியரின் தபன் சபரீஷ். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீர் என புத்தக மூட்டையுடன் மாயமானான்.

வீட்டில் இருந்த அறை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் அம்மா அப்பா நான் உங்களுக்கு நல்லமகனாக இருக்க முடியவில்லை, என்னால் சரியாக படிக்க முடியவில்லை , என்னால் உங்களுக்கு அசிங்கமும், ஏமாற்றமும் தான் தரமுடிகிறது , இந்த முடிவை நான் தற்போது எடுக்கவில்லை , மேடம் அறை வாசலில் உங்களை நிற்கவைத்த அன்றே எடுத்துவிட்டேன் , அப்பா பாவம்  என்னை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார் என்றும்  உருக்கமாக தெரிவித்து இருந்தான்,இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையம் சென்று பெற்றோர் கண்ணீர்மல்க  புகார் அளித்தனர். 

பின்னர் சிசிடிவிகளை ஆய்வு செய்த போலீசார், சபரீஷை விருகம்பாக்கம் பேக்கரி ஒன்றின் அருகில் இருந்து  மீட்டனர். இதையடுத்து தங்களின் மகனை மீட்ட போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் புகார் கொடுத்த மூன்று மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசாருக்கு உயர்அதிகாரிகளும்  பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments