நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் - அமித்ஷா

0 1844

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் கோர்பா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 258-ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 509ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மாவோஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆயுதம் ஏந்திய இளைஞர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாகவும் அமித்ஷா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments