பாஜக செயற்குழு கூட்டத்தில் தகராறு - நாற்காலி வீசி தாக்குதல்

0 2535
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஒரு தரப்பினர் மாவட்டத் தலைவர் அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், மற்ற நிர்வாகிகள் கலைந்து ஓடியதால் கூட்டம் பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments