மூலிகைகளை பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆடாதொடை, நிலவேம்பு, முருங்கை, பிரண்டை, துளசி, கற்பூரவல்லி, எருக்கு போன்ற மூலிகைகளை பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தியாகராயா நகரில் உள்ள செ.தெ. நெல்லைநாயகம் மேல்நிலைப்பள்ளியில் மூலிகைத் தோட்டத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இயற்கை சார்ந்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 200 ஏக்கரில் அஸ்வகந்தா பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் மூலிகை செடிகளை பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய சட்ட வாய்ப்பின் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறிய அமைச்சர், ஒப்பந்த செவிலியர்களின் பணி நியமனத்தின் போது உரிய இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு இருந்தால், ஆவணங்கள் சரிபார்த்தபின், அவர்களின் பணி வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Comments