சீனாவில், 3 மாதங்களில், 2 முறை 'டெஸ்லா' கார்களின் விலை குறைப்பால் ஷோரூமை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்..!
சீனாவில், கடந்த 3 மாதங்களில் 2 முறை டெஸ்லா நிறுவன கார்களின் விலை குறைக்கப்பட்டதால் அண்மையில் கார் வாங்கியவர்கள் ஷோரூம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கார் விற்பனை அதிகரித்தால் உற்பத்தி தன்னால் அதிகரித்துவிடும் என நினைத்த டெஸ்லா நிறுவனம், விற்பனையை அதிகரிப்பதற்காக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகம் விற்பனையாகும் y மற்றும் 3 மாடல் மின்சார கார்களின் விலையை குறைத்தது.
இதனால் அண்மையில் டெஸ்லா கார் வாங்கியவர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.
Comments