சிங்கம்புணரி அருகே மிகுந்த உற்சாகத்துடன் களைகட்டியது இந்தாண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி..!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, இந்தாண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
தைப்பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக, மு.சூரக்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில், புதுக்கோட்டை, மதுரை உள்பட பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, பிற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு, களமாடின....
காளைகளை அடக்க முயன்ற சுமார் 27 பேர் காயமடைந்தனர்.
Comments