ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக, கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர தடை..!

0 1882

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக, கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து  இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலும் பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இருமாநிலத்திலும் இறந்த பன்றிகளின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் இறந்தது தெரிய வந்தது. 

இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சி பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன்,  வளர்ப்பு பன்றி கூடங்களில் உள்ள பன்றிகளை விற்க கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments