இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி..!
இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு, காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு முன்பு காத்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Comments