வங்கியில் தங்க நகைகளை கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்து பணம் மோசடில் ஈடுபட்ட 4 பேர் கைது..!

0 2026

தூத்துக்குடி அருகே இந்தியன் வங்கியில் தங்க நகைகளை கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்து 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரப்பட்டினம் வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளராக படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுடலை என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், தனது கூட்டாளிகள் குமாரவேல், ராம்குமார், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து நகைகளை கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்தும், வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு 55 சவரன் தங்க நகைகளை வங்கியில் இருந்து திருப்பியும் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் (சிவ சுப்பிரமணியன்) புகார் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments