சர்க்கஸ் நிகழ்ச்சியில் பயிற்சியாளரை தாக்கிய சிங்கம்.. சிங்கத்தை விரட்டியடித்து தனது கணவரைக் காப்பாற்றிய பயிற்சியாளரின் மனைவி!

0 2657

ரஷ்யாவில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிங்கம் தாக்கியதில் அதன் பயிற்சியாளர் காயமடைந்தார். அலெக்ஸி மகரென்கோ என்ற பயிற்சியாளர் சிங்கங்களை வைத்து வித்தை காட்டியபோது அவருக்குப் பின்னால் இருந்த ஆண் சிங்கம் பாய்ந்து தாக்கியது.

இதனைக் கண்ட சக பயிற்சியாளரும் அலெக்ஸியின் மனைவி சட்டென சுதாரித்து சிங்கத்தை விரட்டியடித்து தனது கணவரைக் காப்பாற்றினார்.

ஆயினும் சிங்கம் தாக்கியதில் அலெக்ஸிக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments