சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்துகள், இறப்புகள் 12 சதவீதம் குறைவு!

0 1641

முந்தைய 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் 12 சதவீதம் குறைந்துள்ளதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் விபத்துகள் குறித்த விவரங்களை, சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 2022ம் ஆண்டில் மட்டும் 499 சாலை விபத்துகளில் 507 பேர் பலியானதாகவும், காவல்துறை அமல்படுத்திய புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்களின் விளைவாக, கடந்தாண்டு சென்னையில் விபத்துகள் குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட அபராத தொகையில், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2022ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதம் முந்தைய ஆண்டை விட, 60 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments