உக்ரைனின் கிழக்குப்பகுதியில் வலுத்துள்ள மோதல்.. டாங்கிகள், கனரக ஆயுதங்கள் வழங்குமாறு, நட்பு நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் மோதல் நடைபெற்றுவருவதால், டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் வழங்குமாறு, நட்பு நாடுகளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாக்முட் செக்டாரில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவ்திவ்கா மற்றும் குபியன்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் தோல்வியடைந்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இழந்த பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருவதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, கவச போர் வாகனங்களை அனுப்புவதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார்.
Comments