மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் உடல் தகனம்.. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!

0 2415

மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் உடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, கருங்கல்பாளையம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நேற்று உயிரிழந்த திருமகன் ஈவெராவின் உடல் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, கரூர் எம்.பி.ஜோதிமணி, எம்.எல்.ஏ விஜயதாரணி, திருப்பூர் எம்.பி.சுப்பராயன் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

3 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும், சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். கருங்கல்பாளையம் மின் மயானத்தில் எந்தவித சடங்குகளுமின்றி, திருமகன் ஈவெராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments