115 அடி கான்கிரீட் குழாய்க்குள் தவறிவிழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு

0 2859

வியட்நாமில், 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.

டோங் தெப் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 35 மீட்டர் கொண்ட கான்கிரீட் குழாய் ஒன்றில் 10 வயது சிறுவன் விழுந்தான். 25 சென்டி மீட்டர் மட்டுமே அகலம் கொண்ட குழாயில் இருந்து சிறுவனை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறினர்.

தொடர்ந்து, குழாயை சுற்றி  நவீன இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். இந்நிலையில், மீட்புப் பணிகள் தோல்வியடைந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments