உக்ரைன் அணு மின்நிலையம் மீதான தாக்குதலில் இந்தியா சமரச முயற்சியில் ஈடுபட்டது - அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைன் அணு மின் நிலையங்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திய போது பிரச்சினையைத் தணிக்க இந்தியா அமைதியாக சமரச முயற்சியில் ஈடுபட்டது என்றும், கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க ரஷ்யா உக்ரைன் அரசுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர் வியன்னாவில் ஜெர்மன் மொழியில் வெளியாகும் தினசரி நாளிதழுக்கு பேட்டியளித்த போது இதனைக் குறிப்பிட்டார்.
கோவிட்டுக்குப் பிறகான சூழல் மிகவும் பொருளாதாரப் பின்னடைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் அத்தகைய சூழ்நிலையில் யாருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் போர் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Comments