காவல் நிலையத்தில் போலீசுக்கு டியூசன் எடுத்த விசிக பிரமுகர்..!

0 3970
காவல் நிலையத்தில் போலீசுக்கு டியூசன் எடுத்த விசிக பிரமுகர்..!

ஆரணி காவல் நிலையத்தில் வைத்து இடப்பிரச்சனை தொடர்பான விசாரணையின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர், உதவி ஆய்வாளரை சாதி பெயரை கேட்டு ஒருமையில் பேசிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை வீதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்திற்கும், அதன் அருகே கடை நடத்தி வரும் சின்னக்கண்ணன் என்பவருக்கும் ஏற்பட்ட இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பும் அளித்திருந்த புகார்கள் குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது.

அப்போது ஆரணி நகர உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சாதிய வன்கொடுமை வழக்கு குறித்து பேசிக் கொண்டிருந்த போது, இடைமறித்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர், உதவி காவல் ஆய்வாளரின் சாதியை கேட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகின்றது.

இவ்வளவு வாக்குவாதம் அங்கு நிகழ்ந்த போதும் காவல் ஆய்வாளர் இறுதி வரை எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் மவுனமாக இருந்தார். காவல் நிலையத்தில் நடந்த இந்த வாக்குவாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments