பாகிஸ்தானில், சிலிண்டர் தட்டுப்பாடு - பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் மக்கள்..!
பாகிஸ்தானில், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால், மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பிச் சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Comments