சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு உதவ முன்வந்த ஆசிய வளர்ச்சி வங்கி..!
சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடனுதவி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3,4,5 ஆகிய வழித்தடங்களை உருவாக்க ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது.
63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் இப்பணிகள் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இதன் மூலம், தற்போதுள்ள பேருந்து மற்றும் ஃபீடர் சேவைகளுடன் மெட்ரோ ரயில் அமைப்பு ஒருங்கிணைக்கப்படும் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை இணைச் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
Comments