தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.53.34 லட்சம் கையாடல்..!
திருவாரூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 53 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கையாடல் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு உள்ளது.
தப்பாளாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 2021 வரையிலான மூன்றாண்டு காலத்தில் 53 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவு வேளாண்மை சங்கத் தலைவர் ரவி, நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட 10 பேரின் பதவிகளைக் கலைத்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
Comments