பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் முக்கியத் தலைவர்களுக்கு நடிகைகள் மூலம் வலை விரிப்பு... முன்னாள் மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு
அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோரை உளவுபார்க்க நடிகைகள், மாடல் அழகிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் வலை விரித்ததாக சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் வசித்து வரும் அடில் ராஜா என்ற முன்னாள் மேயர் இந்த புகாரை எழுப்பியுள்ளார். சில முக்கியத் தலைவர்களை வலையில் வீழ்த்தி, ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டுவதும் ராணுவ உயர் அதிகாரிகள் வழக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி நடிகைகள் மாடல்களின் பெயர்களையும் அவர் சூசகமாக இன்ஷியலை மட்டும் கூறியுள்ளார்.
Comments