காதல் திருமணம் செய்த இளைஞர் வீட்டிற்கு தீ வைப்பு

0 4309

தெலுங்கானா மாவட்டம் கரீம்நகர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டினை தீ வைத்து கொளுத்திய  பெண்ணின் சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹஜுராபாத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சஞ்சனாவின் தம்பி பாலையா நண்பர்களுடன் சேர்ந்து ராஜசேகர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலையும் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் அந்த வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments