''ஏழைகளுக்கான குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டுவதா?'' ஒப்பந்ததாரரை கடிந்து கொண்ட ஆட்சியர்..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கட்டப்படும் இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள் தரமற்ற முறையில் உள்ளதாகக்கூறி ஒப்பந்தாரர்களை ஆட்சியர் கடிந்து கொண்டார்.
ஊத்துக்காட்டில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் குடியிருப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர் ஆர்த்தி, ஏழைகளுக்கான குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டுவதா? என கூறி கோபமாக கூறினார்.
குடியிருப்பு பணிகளில் குளறுபடிகளை இருந்ததை கண்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவியும், ஒப்பந்ததாரர்கள், மேற்பர்வையாளர்களை கடுமையாக எச்சரித்தார்.
Comments