பொங்கல் பரிசுத்தொகை வங்கியில் செலுத்த வாய்ப்பில்லை - அமைச்சர் பெரியகருப்பன்

0 2100

தமிழகத்தில் வழங்கப்படவிருக்கும் பொங்கல் பரிசுத்தொகையை, வங்கிக்கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையை அடுத்துள்ள பையூர் கிராமத்தில் வேலுநாச்சியாரின் 293வது பிறந்த தின விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதனை தெரிவித்தார்.

பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள், தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா நிவாரணத் தொகையாக ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என திமுக கேட்டதாகவும், ஆனல், பொங்கல் பரிசுத்தொகை கேட்டதாக அதிமுகவினர் தவறாக நினைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments