"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ரேஷன் அரிசியை கடத்தி போலி குங்குமம், மஞ்சள், கலர் கோலமாவு தயாரிப்பு.. 7 டன் ரேஷன் அரிசி, ரசாயன பவுடர் பறிமுதல்..!
சென்னை தண்டையார்பேட்டையில் ரேஷன் அரிசியை கடத்தி, அதிலிருந்து போலி மஞ்சள், குங்குமம் தயாரிக்கும் குடோன்களில் இருந்து, 7 டன் ரேஷன் அரிசி மற்றும் ரசாயன பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசியை மாவாக அரைத்து அதில் ரசாயனம் கலந்து போலி மஞ்சள், குங்குமம் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனைக்காக சென்றனர்.
குடோனில் இருந்த ஊழியர்கள், அவர்களை பார்த்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. 3 குடோன்களில் இருந்து போலி குங்குமம், மஞ்சள், அரவை இயந்திரம் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Comments