விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட பி.எஸ்.ஐ அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ தரக்குறியீடு இல்லாத 327 பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் நச்சுத்தன்மையுடைய ரசாயன பூச்சு, வெடிக்கும் பேட்டரி போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியை யும், உரிய விதிகளை பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் பொம்மைகளுக்கு தரச்சான்று அளிக்கும் பணியையும் இந்திய தர நிர்ணய அமைப்பு செய்து வருகிறது. இந்நிலையில், tiara toy zone என்ற கடையில் குழந்தைகள் விளையாட ஏதுவாக இல்லாத 127 எலக்ட்ரிக் பொம்மைகள் உட்பட 327 பொம்மைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது பொம்மையின் விலையை விட 10 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments