இந்தியா எப்போதும் போருக்கு எதிரான நாடாகவே இருந்து வருவதை இந்தியாவின் பலவீனமாக கருதக் கூடாது-அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா எப்போதும் போருக்கு எதிரான நாடாகவே இருந்து வருவதை இந்தியாவின் பலவீனமாக கருதக் கூடாதென மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துளளார்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ பயன்பாட்டை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட சியோங் பாலம் மற்றும் ஜம்முகாஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிளில் 724 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட 26 உள்கட்டமைப்பு திட்டங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.
அப்போது, இந்தியா எந்த நாட்டுக்கும் எதிராகப் போரைத் தொடங்கவில்லை என்றும், எந்த நாட்டிலிருந்தும் ஒரு அங்குல நிலத்தைக் கூட கைப்பற்றவில்லை என்றும் ராஜ்நாத்சிங் பேசினார்.
Comments